Wednesday, January 28, 2009

பார்வை இழந்த நாள்

உலகக் குளத்தில்
ஒருநாள்
எப்போதும்
போல்
குளித்துக் கொண்டிருக்கிறேன் .

திடிரென பார்வை பறி போகிறது
கதறி அழுகிறேன்
கரையின் இரு மருங்கிலும்
கண்டவர்
துணுக்குற ,

ஆறுதல் சொன்னார்கள் .
பின்பு
அவசர
வேலைக்குள் ஆழ்ந்து போனார்கள் .

கண்ணிருக்கும்போதே
குருடன் நான்
இனி என் செய்வேன்?

முன்னுரையின்
முதல் வாக்கியமே
முற்றும் என்பதா ?

இரண்டு சாத்தியக் கூறுகள்
மூழ்கிப் போக வேண்டும்.
அன்றி
மூச்சு திணற வேண்டும்.

எந்தை
புகட்டியது போல்
கை கால் உதைக்கிறேன்.

அட ,
கல்விக் காற்றால்
நன்றாய் சுவாசிக்கிறேன் .

ஒன்று மட்டும் உறுதி
கரைந்து விடப் போவதில்லை
நிச்சயம்
கரைத் தொடப் போகிறேன்.

சில படகுக் காரர்கள்
பார்த்து பரிதாபப் படுகிறார்கள்.

நீந்திக் கொண்டே இரு
ஆறுதல் சொன்னார்கள்.

சில படகுக் காரர்கள்
என்னிடம்
தாமரைக் கேட்டார்கள்.

கைகெட்டியத்தை
பறித்துத் தருகிறேன் .

கை கொடுப்பார்கள் என்றல்ல
தாமரை காயும் வரை
என்
நினைவிருக்கட்டும்.

ஒன்று மட்டும் உறுதி
நான் ,
கரைத்து விடப்போவதில்லை
நிச்சயம் கரை தொடப் போகிறேன் .

( என் தந்தை இறந்த பொழுது என் நிலை - மேற் கண்ட கவிதை )

இனியவன் .ஜி .இளையராஜா .

No comments:

Post a Comment