Wednesday, January 28, 2009

எண்ணக் குமிழ்கள் 3

தோல்வியைக் கொண்டாடுவோம் .
போட்டி என்று ஒன்று இல்லை என்றால் வெற்றி தோல்வி என்பது கிடையாது .

தோல்வி என்பது ஒன்று இல்லை என்றால் வெற்றியின் இனிமையை அறிய இயலாது .

‘’பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து
பூமா தேவிச் சொன்னாளாம் , நீதான் ஒன்பது முறை எழுந்து நின்ற மாவீரன் என்று ’’.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற போட்டி பொறாமையாக மாறக்கூடாது .


நான் சிறு வயதாக இருந்தபோது என் வீட்டிற்கு அடிக்கடி என் தந்தையுடன் பேச வரும் ''டைலர் தாத்தா ’’சொன்னது நினைவுக்கு வருகிறது .

‘’பொறாமை ‘’ என்பது இருக்க கூடாது இருந்தால் அதை திருப்பி போட்ட நிலைதான் என்பார் {மைறபோ }.

தயவு செய்து ,முயற்சிகாதவர்கள் தோல்வியைப்பற்றி பேசாதீர்கள் .

ஒரு வேலை தோற்று விட்டால் என்று நினைத்தே ,சிலர் சோதனைகளை தள்ளி போடுகிறார்கள் .

தோற்று போவதில் கூட வெற்றியைத் துரத்தி தோற்றுப்போக வேண்டும் .அந்த தோல்வி தான் அடுத்த வெற்றிக்கு வித்தாக அமையும் .

வள்ளுவன் சொல்லுவான் ,
‘’யானை பிழைத்த வேல் ஏந்தல் அரிது ”.

{ஒரு காட்டில் முயலை வெற்றிகரமாக பிடித்து விட்டேன் என்பதை விட .ஒரு யானையை வேட்டையாடப் போய் உன் வேலே பறி போவது தான் வீரம் }

இன்று உலக அளவில் பேசப்படுகிற இந்தியர் அமிதாப்பச்சனின் குரல் ஆரம்ப காலத்தில் ,
இலங்கை வானொலியில் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்ட ஒன்று .

அன்று அவர் தோற்காமல் போயிருந்தால்
இன்று இந்த நிலையை அடைந்திருப்பரா ?.

எனவே ,

நண்பர்களே ,தோல்வியைக் கொண்டாடுவோம் .
இனியவன் .ஜி . இளையராஜா

ஒரு கரித் துண்டும் சில வண்ணப் பொடிகளும் .

அந்த
உயர்ந்த ஆலமரத்தின் அடியில்
பேருந்து
நிறுத்தத்திற்கு அருகில்

எனைப் பலமுறைப்
பார்த்திருக்கலாம் .

காய்ந்த தரை
ஒரு கரித்துண்டு
சில வண்ணப் பொடிகள்.

சாலையை யொட்டிய தரை
அடுத்து ஒரு சின்ன மேடை
ஓரமாய் ஒருக் கூடை .

கூடைக்குள் இரண்டு பழைய வேட்டிகள்
ஒரு கிழிந்த துண்டு
என் காதலியின்
பழைய
கருப்பு வெள்ளை
புகைப்படம் .

ஒரு கண்ணாடிக் கோப்பையில்
காலையில்
குடித்தது போக
மீதித் தேநீர்

என் ரொட்டித் துண்டுக்கு காத்திருக்கும்
நான்கு காக்காய்கள் .

சட்டைப் பையில்
நேற்றைய ஓவியத்திற்கான
சில எட்டனாக்களும்,
சில காலனாக்களும் .

பெரும்பாலும் என்
ஓவியங்கள்
கிருஷ்ணனோ ,
சிவனோ இல்லை

என் காதலியின்
காதலின்
முகம் மட்டுமே

இன்று புதிய ஓவியம்
அவளின் தெற்றுப்பல்
தெரியும் சிரிப்பு.

அவள் பார்த்திருந்தால்
வழக்கம் போல்
ஒரு முத்தம் தந்திருப்பாள்

அதற்க்காகவே
பத்துப் படங்களை வரையலாம்

வரைந்த ஓவியத்தை
பல கோணங்களில் பார்கிறேன்

நிழலை பிரதிப் பலிக்கவே
நேரம் எடுத்துக் கொள்கிறேனே ?
அசலை செதுக்க
என் செய்திருப்பன்
பிரம்மன் ?

ஐயோ !!!????????
எங்கிருந்து வந்தது
அந்த மழை

தெறித்து ஓடும் மக்கள் கூட்டம்
ஓடும் வேகத்தில்
ஒருவன்
எனை
கீழே தள்ளிவிட
அடுத்தவன் என் காலை மிதிக்க
கொடுரமான வலி ...

மேடையின்
ஓரமாய் உட்காருகிறேன்
பேய் எனப் பேயும் மழை .

அடைமழையில் அழுகிறேன்.

உற்றுப் பார்பவற்கும் ,
பேருந்து நிலையத் தினின்று எட்டிப் பார்பவர்கும்

நான் அழுவது
கால் வலிக்காக அல்ல
கரையும் காதலியின் ஓவியத்திற்காக .

இனியவன் .ஜி .இளையராஜா

அந்த அதிகாலை .

ஆரம்பிப்பதற்கு
முன்பே
அலுத்துவிடுகிறது
வாழ்க்கை .

குழப்பங்கள்
குமியடிக்க
ஒரு குழந்தையைப்போல்
சுருண்டு உறங்கினேன்

சற்றே மாற்றத்துடன் விடிந்தது
அந்த அதிகாலை

புதிய நபரை
பார்த்த பின்னும்
வள் வள்ளென்று,
குறைக்காத நாய்

தேடாமலே
கிடைத்துவிட்ட செருப்பு
பள்ளி செல்ல
அடம் பிடிக்காத குழந்தைகள்.

குற்றம் கூறி
சண்டை பிடிக்காத மனைவி .


நேரம் தவறாமல் வந்து
நெரிசல் இல்லாத பேருந்து

வியர்வையில் கசங்காத
என் சட்டை .

வணக்கம் சொல்வதற்கு முன்பே
புன்னகையுடன் கைகுலுக்கும் மேலாளர்.

தலைவலிக்கும் முன்பே
கிடைத்த தேனிர்.

தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட
குறுஞ்செய்தி நண்பர்கள் .

போக்குவரத்த்கு
நெரிசல் இல்லாத
சாலைகள்

நுழைவதற்குள்ளகவே
கனிவுடன்
வரவேற்கும்
மனைவி

அன்றைய சமையலில்
எனக்கு பிடித்த உணவு

விளம்பரம் இல்லாத
தொலைக்காட்சித் தொடர்கள்.

சே !
என்னடா ஆச்சு இந்த உலகத்துக்கு ?

தொல்லையின்
வாய் வழி
பிதுங்கி வருவது தானே
வாழ்கை .

கட்டிலின் விளிம்பினின்று
புரண்டு விழுகிறேன்
நான் கீழே விழுந்ததை விட ,
தன் தூக்கம் கலைந்ததாய்
மனைவி கதறுகிறாள் .

ஆஹா
நான் சராசரி வாழ்க்கைக்கு
வந்து விட்டேன்.

இனியவன் . ஜி . இளையராஜா .

பால் வெளித் திரள் .

தூக்கம் விழித்த
பின்னிரவில் ,
வெளிக் காற்று வாங்கி வான் நோக்கினேன்.

எரியும் நட்சத்திரங்கள்
ஏற்றி வைத்த தீபங்களாய் ?

அறிவியல் சொல்கிறது
ஆயிரமாயிரம் சூரியக் கும்பங்கள்
பால்வெளி திரளில்
பயணிக்கின்றதாம்.

அந்தக் குடும்பங்களில்
பூமி இருக்குமா ?
எனில்,

மனித வளர்ச்சி ?
மொழி வளர்ச்சி ?
அறிவியல் ?

தீயைக் கண்டறிந்திருப்பனா ?
திராவிடம் வளர்திருப்பனா ?
அங்கே
தமிழ் இருக்குமா ?
காதல் ?
கவிதை ?
இசை ?

அரசியல் ?
மதம் ?
சாதி?
தீண்டாமை ?


பொறாமை ?
இன வேற்றுமை ?
மொழிக் கூச்சல் ?
நிலக் கோட்பாடு ?
நீருக்குப் போராட்டம் ?

திருட்டு ?
விபச்சாரம் ?
தீவிரவாதம் ?
கல்விக்கு கட்டணம் ?
வரதட்சணை ?
விதி மீறல் ?

எது இருக்கிறதோ இல்லையோ

வேலை கிடைக்குமா ?

விண்ணப்ப படிவம்
எங்கே கிடைக்கும் ?

கையுட்டு ஏதும்
தேவைப் படுமா ?

விபரம்
அறிந்தவர்
தொடர்புக் கொள்க ????????????????????????????

விழிப்புடன்
மனிதன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இனியவன் .ஜி .இளையராஜா .

பார்வை இழந்த நாள்

உலகக் குளத்தில்
ஒருநாள்
எப்போதும்
போல்
குளித்துக் கொண்டிருக்கிறேன் .

திடிரென பார்வை பறி போகிறது
கதறி அழுகிறேன்
கரையின் இரு மருங்கிலும்
கண்டவர்
துணுக்குற ,

ஆறுதல் சொன்னார்கள் .
பின்பு
அவசர
வேலைக்குள் ஆழ்ந்து போனார்கள் .

கண்ணிருக்கும்போதே
குருடன் நான்
இனி என் செய்வேன்?

முன்னுரையின்
முதல் வாக்கியமே
முற்றும் என்பதா ?

இரண்டு சாத்தியக் கூறுகள்
மூழ்கிப் போக வேண்டும்.
அன்றி
மூச்சு திணற வேண்டும்.

எந்தை
புகட்டியது போல்
கை கால் உதைக்கிறேன்.

அட ,
கல்விக் காற்றால்
நன்றாய் சுவாசிக்கிறேன் .

ஒன்று மட்டும் உறுதி
கரைந்து விடப் போவதில்லை
நிச்சயம்
கரைத் தொடப் போகிறேன்.

சில படகுக் காரர்கள்
பார்த்து பரிதாபப் படுகிறார்கள்.

நீந்திக் கொண்டே இரு
ஆறுதல் சொன்னார்கள்.

சில படகுக் காரர்கள்
என்னிடம்
தாமரைக் கேட்டார்கள்.

கைகெட்டியத்தை
பறித்துத் தருகிறேன் .

கை கொடுப்பார்கள் என்றல்ல
தாமரை காயும் வரை
என்
நினைவிருக்கட்டும்.

ஒன்று மட்டும் உறுதி
நான் ,
கரைத்து விடப்போவதில்லை
நிச்சயம் கரை தொடப் போகிறேன் .

( என் தந்தை இறந்த பொழுது என் நிலை - மேற் கண்ட கவிதை )

இனியவன் .ஜி .இளையராஜா .

புதுப் பூ

அதோ !
கவிக்கடலில்
மரபு நீச்சல் போட்டு
புகழ் சொட்ட
நிற்கும் பலர் .

நானோ,
கால் நனைத்த மரபு நுரையிலும்,
சந்த அலையிலுமே,
மயங்கிப் போகிறேன்.

முரண்டு பிடிக்கவில்லை
முரண்பாடும் இல்லை

கடலை தொடுகின்ற
இந்த கரை
பிடித்திருக்கிறது .

புதுக் கவிதை
சிப்பிகள்
பொறுக்குவதிலேயே

இந்த குழந்தை
விருப்பம்
கொள்கிறது .

இனியவன் .ஜி .இளையராஜா .

Tuesday, January 27, 2009

சமையற் குறிப்புகள் (நளன்)

அண்மையில் செசெல்சு நேஷன் செய்தித் தாளில் வெளி வந்த சில புகைப் படங்கள் (கன்ச்டன்ஸ் லெமுரியா ரிசார்ட்)..............


......................

வேல் விழியாள்

பீலி யொத்த பாதங்கள்.
பிடில் யொத்த நாணங்கள் .
முகில் யொத்த தேகம்

மயிர் யொத்த இடை
மழை யொத்த பேச்சு
என் மனசெங்கே போச்சு ?

அழகிய சலஞ்சலம்
அதிகாலை சங்கீதம்

வேல் விழியாள்.
அவள்
வேல் விழியால்...........

கருங் குழலாள்.
அவள்
கருங் குழலால்........

கற்கண்டு மொழியாள்.
அவள்
கற்கண்டு மொழியால்...........

ஈர்ப்பு விசை இற்று போக ,
இளங் காற்றில் திரியாலானேன்.

இனியவன். ஜி. இளையராஜா

கவனம் கலைத்தவள்

தெரியாத முள்ளில்
கால் வைக்க
தைக்குமே முள்
அந்த கணத்தில் ,

எதேச்சையாய் வானம் நோக்க
எரிந்து விழுமே
எரி நட்சத்திரம்
அந்த கணத்தில் ,

கரைத் தொட்டு மீண்டும்
கடலைச் சேருமே
அலை அந்த கணத்தில்,

அழுகின்ற மழலை
கவனிக்கிறார்களா
பார்த்து ,
மீண்டும்
அழத் தொடங்குமே
அந்த கணத்தில்,

மனித இனம்
நெருங்கினாலே
கிலையினின்று
பறக்குமே பறவை
அந்த கணத்தில்,

தீக்குச்சிக்கும்
தீப்பெட்டிக்கும்
உரசலில் பிறக்குமே
நெருப்பு
அந்த கணத்தில்,

கொண்டேன்
கொண்டேன்
காதல் கொண்டேன்.


இனியவன் .ஜி .இளையராஜா

Saturday, January 24, 2009

எண்ணக் குமிழ்கள் 2

ஆதலால் மானிடரே தவறு செய்யுங்கள்?!

ஒரு வித்தியாசமான மேற்கோள் படித்தேன் .

“பிறருடைய தவறுகளில் இருந்து உன்னை திருத்திக் கொள் , ஏனென்றல் எல்லா தவறுகளையும் செய்ய உனக்கு நேரமில்லை ”.

என்னைப் பொறுத்த வரையில் ,

“உன்னுடையத் தவறுகளை நீயே செய் ”

அனுபவம் = மொத்த தவறுகள்

உயர் பதவியில் இருக்கும் ஒருவர் செய்த சாதனைக்கு அன்று பாராட்டு விழா .

எப்படி உங்களால் இந்த நிலையை எட்ட முடிந்தது ?

நான் எடுத்த சரியான முடிவுகள் தான் காரணம் .

எப்படி உங்களால் சரியான முடிவுகளை எடுக்க முடிந்தது ?

சரியான முடிவுக்கான காரணிகளை கண்டுகொண்டேன் .

காரணிகளை எங்ஙனம் கண்டறிந்தீர்கள் ?

நான் செய்த சரியான தவறுகளினால் !!!!!!!!!!!!!!!!!

அதென்ன சரியான தவறு ?

சரியில்லாத தவறு ?

சில பேர் இருக்கிறார்கள் {சரியிலாத தவறு }

எனக்கு அதை நன்றாக செய்யத் தெரியும் ,இதை நன்றாக செய்யத் தெரியும் , என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்வார்கள் .

இது எப்படி ஒரு முறை செய்து காட்டுங்கள் என்றால் ,எதையாவது சொல்லி நழுவி விடுவார்கள் .

உங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .எப்படி ??????????????????????உங்களுக்கு தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்ளுங்கள் .
அதை தெரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் .

பயிற்சியில் தவறு நேரும் {சரியான தவறு }

தொடரும் முயற்சியால் ,
தவறுகளை நீக்கலாம் .

ஆதலால் மானிடரே தவறு செய்யுங்கள் ……………..
இனியவன் ஜி .இளையராஜா

Friday, January 16, 2009

என் அலைவரிசையை உலகத்தோடு இணைக்கும் முதல் முயற்சி

அன்பர்களே ,நண்பர்களே,
என் அலைவரிசையை உலகத்தோடு இணைக்கும் முதல் முயற்சி இது .
உற்சாகப்படுத்துதலோ ,
தவற்றை சுட்டிக்காட்டுவதிலோ ,
உங்களின் விமர்சனகளை பதிக்க வேண்டுகிறேன் .
.
உங்களின் படைப்புகள் ஏதேனும் இருப்பின் ,(எந்த துறையாக இருப்பினும் )
அனுப்பி வையுங்கள் .

பரிசீலித்து உங்களின் பெயருடனே வெளியிடப்படும் .

பரிசீலிக்கப்படவில்லை, எனில் உங்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் .


படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : kurilnedil@gmail.com


வாருங்கள் கை கோர்ப்போம் .

இனியவன் .இளையராஜா . ஜி .

அடுத்த பதிவில்

அடுத்த பதிவில் .................
ஏற்றம் தரும் அதிர்ஷ்ட எண்கள் -தெய்வத்திரு T .K.S. கணேசன்.
(நூல் அறிமுக விழா –புகைப்படங்களுடன் அடுத்த பதிவில் )

சமையற் குறிப்புகள் .

இசை விருந்து .

நகைச்சுவைத் தோரணங்கள் .

சொர்கத் தீவு –சீசெல்சு ஒரு பார்வை .

என்னைக் கவர்ந்த வாசகங்கள் .

மேலும் பல பயனுள்ள பக்கங்களுடன் …………….

Wednesday, January 14, 2009

எண்ணக் குமிழ்கள் 1

வள்ளுவன் வாய் மொழி போல் ,
எண்ணத்தின் கன்னக் கதுப்புகள் சிவக்கும் போதெல்லாம் ,உனைச் சுற்றி பல வண்ண விளக்குகள் எரியும் .
இருக் குழுக்கள் உண்டு ,
ஒன்று - இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் .
இரண்டு -மாறிவிட்ட இயற்கையில் மகிழ்ட்சி காண்பவர்கள்
சில நேரங்களில் விதிகளை மாற்ற வேண்டும் ,
சில நேரங்களில் விதிகளுக்கேற்ப நாம் மாற வேண்டும் .
அது ஒரு செருப்புத் தயாரிக்கும் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வு . நேர்முகத்தேர்வில் தகுதி பெற்ற இருவர்கள் .

யாருக்கு வேலை தருவது என்பது கேள்விக்குறியாக ?

மேலாளர் ,இருவரையும் ஒரு குறிபிட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் நிலைப் பற்றியும் ,அவர்களின் செருப்பின் மீதான விருப்பு வெறுப்பு பற்றியும் அறிந்து வரச் செய்தார் . இருவரில் ஒருவர் சொன்னார் ,

இங்கு யாருமே செருப்பு அணிவதில்லை , இங்கு நம்மால் வேருன்ற முடியாது .

இரண்டாமவர் சொன்னார் ,இங்கு யாருமே செருப்பு அணிவதில்லை , எனவே நாம் செருப்பை அறிமுகப்படுத்தி விற்பனையில் கோலோய்ச்ச்சலாம் .

இரண்டாமவற்கே வேலை கிடைத்தது .

ஒரே நிகழ்ச்சியைய் இரு வேறான மன நிலையில் காண்பது ,இரு சமையற் நிபுணர்கள் ,
இரு பப்பாளியை அறிகின்றனர் . இருவரின் பப்பளிக்குள்ளும் விதை இல்லை .
முதல் சமையலர் சொல்கிறார் ,இந்த பப்பாளி சரி இல்லை .

இரண்டாமவர் , ஆஹா விதைகளை நீக்கும் வேலை மிட்சம் .

நான் முன்பே சொன்னது போல் ,

இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் .அல்லது மாறிவிட்ட இயற்கையில் மகிழ்ச்சி காண வேண்டும் .


உன்னை புதுப்பித்துக் கொள்ள ,அன்றி ஓடும் உலக நதியில் உன் உராய்வை உயிர்பிதுக்கொள்ள நீ சூடும் எந்த பூவும் அழகு தான் .


இனியவன் .ஜி .இளையராஜா

.

நேற்றைய அதிசயம்

நட்சத்திரக் கண்கள்
இரண்டு
வளர்பிறை வாய்
ஒன்று
அட ,
வானுக்கு பிறந்த,
அற்புதக் குழந்தை .
வளர்பிறை மட்டும் –சிவனின் அம்சம் .
ஒற்றை நட்ச்சத்திரம் –உயிர்த்தெழுந்த இயேசு
வளர்பிறையோடு சேர்ந்த நட்சத்திரம் –இசுலாத்தின் ஒளி

எனக்கென்னவோ ,
இது கனவிலே கூடநிகழாத ,
மும்மதத்தின் முத்தாய்ப்பு .

உலகம் அழிவதக்கு
இதெல்லாம் அறிகுறியா ?
அப்பாவியாய் கேட்டார்
நண்பர் ஒருவர் .

காணக் கிடைக்குமா ?
இந்தக் காட்சி?
அழிந்து தான் போகட்டுமே ,
அகிலம் .
இனியவன் ஜி .இளையராஜா

இவர்கள் புதியவர்கள் ....

கருத்த மேகம்
மழை வருமா ?

நனைவதற்கு

மனமில்லை அவனுக்கு
குடை கொண்டு செல்கிறான் .

பயணத்தின் பாதியிலே
மழை நின்று விட ,

அலுத்துக் கொள்கிறான் .

என்னடா இது !
இந்த மழையே
இப்படித்தான் ,

குடை இருந்தால்
மழை வராது ,
மழை வரும் போது
குடை இருக்காது .

மழை வரும் போது
குடை வைத்திருப்பினும் ,
குடை வைத்திருந்து
மழை இல்லையெனினும் ,

அவனின் குறிக்கோள் என்னவோ
நனையாமல் இருப்பது தானே ?

இவர்கள் புதியவர்கள்
இவர்களுக்கு
கடவுளும் வேண்டும்
கஷ்டமும் வேண்டும்.!!!!!!!!!!!!
இனியவன் ஜி .இளையராஜா

புல்லாங்குழலிடம் பூங்காற்று

ஏ மூங்கிலே ,

வருடும் போதெல்லாம்
வாய் இசைக்கிறாய் ,

மறந்து போன
உன் வாழ்க்கைக்கு
நான்,
மருந்திடும் போது ,

பூரிக்கின்றாயா ?

புலம்புகின்றாயா ?

இனியவன். ஜி .இளையராஜா

கவிதை சாரல் அறிமுகம் 1

ஒரு நாள்

இல்லாத ஊருக்கு
வழி கேட்டேன்
நில்லாத காற்றிடம் ,

புரியாத மொழியில் சொன்னது
தெரியாத பூவிடம் கேட்க சொல்லி ,,

கரையாத பொருளை கரைக்க
மறையாத கானல் நீர் தேவை .

சுற்றாத திசையில் பூமி சுத்த ,

பஞ்சும் நெருப்பும்
பற்றாத விதிக்கு ஒப்பம் இட்டால்
குற்றால அருவி வானோக்கி தாவும் .

சிக்காத கிளி ஒன்று
சொல்லாத ஆருடம் சொல்ல ,

இல்லாத பொருளில் கவிபடித்து
எனை கொல்லாமல் விடுக !!!!!!!!!!!!

இனியவன் ஜி .இளையராஜா

vanakkam

Anbirkiniya tamizh idayangale,
iniyavan elayaraja g in vankkangal.
inivarum kaalathil , naan ungalodu kai kulukka kaathirukkiren.
kavithaigalai,
katturaigalai,
nagaicsuvaigalai,


INI
ANATHAM AARAMBAM.


iniyavan,
elayaraja g