Friday, September 18, 2009

மா மரச் சோலையிலே !

மா மரச் சோலையிலே !
மழை மேகம் வருகின்ற
வேளையிலே !

மிதமான தூறலும்
இதமான சாரலும்
மண் வாசத்தோடு ஒருமிக்க

மா படர் கிளையின்
கீழே ஒரு சோடி
குலவுகின்றது தம் பருவம் பாடி

முத்தமிழே !நிறைமதியே !
முக்கனியே முத்தந்தரவா
அல்லேல் நீ எனக்கு
முத்தம் தர வா

விளிக்கின்ற காளையை
விழியோரமாய்த் தாக்கினாள்
விதியால் வந்ததோ
அதனின் வலிய
சதியால் வந்ததோ ?

பார்த்து நின்ற குருவி ஒன்று
பறந்திட்ட வேளையில்
கிளையில் இருந்த தூசு
பாவையின் பாவையில் பட்டது

துடித்திட்டன மான்விழிகள்
துயருற்று அய்யோ என்றன
செவ்விதழ்கள்

நிலை குலைந்த காளை
நிலை உணர்ந்த வேளை
தலைப் பற்றி விழி திறந்து
மென்மையாய் ஊதலானான்
அவளில் ஊறலாணன்

கரம் பட்டதும்
அவன்
கனல் பட்டதும்
வில்லாக வளைந்தால் கோதை
விவரமாக போட்டான் பாதை

காளையின் கை விரல்கள்
மெல்ல நகன்று
காதலியின் செவியை வருட
நமக்கேன் வம்பென்று
கழன்று வீழ்ந்தது காதணி

பூங்கோதை இடையினிலே
கைப் பதித்து
நெற்றி முன் சுருளும் முடி நகர்த்தி
உச்சி முகர்ந்து
நாசித் தடவி
ஆரம்பித்தான் இதழ் பொருத்தி
ஆங்கே மூண்டது ஓர் பெருந்தீ

இன்னுமா நிற்கிறீர்கள் இங்கேயே
உங்களைதான்
சாய்கிறது பொழுது
பெருமழை வருவதற்குள்
சென்றுவிடுங்கள்
சாய்த்தவலும்
சாய்ந்தவனும்
இனி மீண்டெழ நேரமாகும் .

இனியவன் . ஜி .இளையராஜா

1 comment:

Unknown said...

akkum akkum neram akkum karam pattathum avan kanal pattathu enna karpanai epppppppa mudiyala

Post a Comment