Friday, September 18, 2009

நாட்டுப்புறப் பாடல்

சில்லுனு சில்லுனு மழை தூற- என்
செவ்வந்தி நீ எங்கப் போற ?
சில்லுனு சில்லுனு மழை தூற-என்
செங்கமலம் நீ எங்கப் போற ?
(சில்லுனு)
கூடல் நகர் நான் போயி வந்தேன் -ஒரு
கூடப் பூவு வாங்கி வந்தேன்
ஊடல் கொண்டு போறவளே -நான்
உன்னத் தேடி ஓடி வந்தேன்.

ஆடி வரும் மெல்லினமே -என்
அத்த பெத்த ரத்தினமே
சேந்துக்கலாம் சேந்துக்கலாம் செல்லமே
இளையராசாவுக்கு வாக்கப்படு அன்னமே !
(சில்லுனு)

சின்ன சின்ன பூவெடுத்தேன் -அந்த
வானவில்லில் நாறெடுதேன்
சேந்துக்கலாம் சேந்துக்கலாம் செல்லமே -உன்
பாதத்துக்கு காத்திருக்கு என் இல்லமே !
(சில்லுனு)
இனியவன் .ஜி.இளையராஜா

காதல் மழை

எழுத்துக்களை திரட்டுகின்றேன்
வார்த்தை மாலையாக்க
என்னைச் சுற்றிலும் காகித மலைகள்.

ஓவ்வொரு சந்திப்பிலும்
நீ திருத்தப்பட்ட ஓவியமாய்
சிரிக்கிறாய்!

நான் ஏக்கங் கொண்டவனாய்!
நீ ஏதும் அறியாதவளாய்?

கோலப் புள்ளியாய் நீ
உனைச் சுற்றும் கோடுகளாய் நான்
கண்டிப்பாய் நமை
கரைத்து இணைக்கும்
காதல் மழை

இனியவன். ஜி. இளையராஜா

மழைத்துளி 3

மரண வேர்களில்
மனிதச் செடிகள்
அழுகிப் போகுமுன்
இனித்துவிட்டுப் போ !

இனியவன் .ஜி.இளையராஜா

மழைத்துளி 2

சில பூவினம்
தேன் சுரப்பது
வண்டுக்க்காகவா?
மகரந்த சேர்க்கைக்காகவா ?
ஓ!
பூவிலும் கையூட்டா?!

இனியவன் .ஜி.இளையராஜா

மழைத்துளி 1

நிலவில்
நட்சத்திரங்கள்
உன் பருக்கள்.

இனியவன் .ஜி.இளையராஜா

மா மரச் சோலையிலே !

மா மரச் சோலையிலே !
மழை மேகம் வருகின்ற
வேளையிலே !

மிதமான தூறலும்
இதமான சாரலும்
மண் வாசத்தோடு ஒருமிக்க

மா படர் கிளையின்
கீழே ஒரு சோடி
குலவுகின்றது தம் பருவம் பாடி

முத்தமிழே !நிறைமதியே !
முக்கனியே முத்தந்தரவா
அல்லேல் நீ எனக்கு
முத்தம் தர வா

விளிக்கின்ற காளையை
விழியோரமாய்த் தாக்கினாள்
விதியால் வந்ததோ
அதனின் வலிய
சதியால் வந்ததோ ?

பார்த்து நின்ற குருவி ஒன்று
பறந்திட்ட வேளையில்
கிளையில் இருந்த தூசு
பாவையின் பாவையில் பட்டது

துடித்திட்டன மான்விழிகள்
துயருற்று அய்யோ என்றன
செவ்விதழ்கள்

நிலை குலைந்த காளை
நிலை உணர்ந்த வேளை
தலைப் பற்றி விழி திறந்து
மென்மையாய் ஊதலானான்
அவளில் ஊறலாணன்

கரம் பட்டதும்
அவன்
கனல் பட்டதும்
வில்லாக வளைந்தால் கோதை
விவரமாக போட்டான் பாதை

காளையின் கை விரல்கள்
மெல்ல நகன்று
காதலியின் செவியை வருட
நமக்கேன் வம்பென்று
கழன்று வீழ்ந்தது காதணி

பூங்கோதை இடையினிலே
கைப் பதித்து
நெற்றி முன் சுருளும் முடி நகர்த்தி
உச்சி முகர்ந்து
நாசித் தடவி
ஆரம்பித்தான் இதழ் பொருத்தி
ஆங்கே மூண்டது ஓர் பெருந்தீ

இன்னுமா நிற்கிறீர்கள் இங்கேயே
உங்களைதான்
சாய்கிறது பொழுது
பெருமழை வருவதற்குள்
சென்றுவிடுங்கள்
சாய்த்தவலும்
சாய்ந்தவனும்
இனி மீண்டெழ நேரமாகும் .

இனியவன் . ஜி .இளையராஜா

Friday, September 4, 2009

நாட்டுபுறப் பாடல் !

சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?

அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா ?

ஆத்தங்கரை ஓரத்துல
அந்தி மழை மேகத்துல
சேர்ந்து நாம நனஞ்சிருந்தோமே ,
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

கம்மாக்கரை ஓரத்துல ,
கால்வாயுக்கு பக்கத்துல
உம்மடி மேல படுதிருந்தேனே ?
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

ஆடு மேய்க்க வருகையில
ஐயனாரப்பன் கோவிலிலே '
கைய புடுச்சி இழுத்தேனே ,
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

கொய்ய மரத்துல அணில் புள்ள
நீ தான் எனக்கு மாப்புள்ள
சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?

எங்கப்பன்கிட்ட பொண்ணு கேளு
சேர்ந்து வாழ மண்ணு கேளு
சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?
இனியவன் .ஜி.இளையராஜா